இந்தியா, பிப்ரவரி 6 -- மலிவான புரத மூலம் என்றால் அது முட்டை தான். முட்டை பல தர பட்ட மக்களும் எளிதாக வாங்க கூடிய ஒரு உணவு பொருளாக இருந்து வருகிறது. மேலும் அசைவ உணவுகளை சமைக்க முடியாத சமயங்களிலும் முட்டை ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது. முட்டையை வைத்து பல விதமான உணவு வகைகளை செய்ய முடியும். முட்டையை வெவ்வேறு வழிகளிலும் சமைத்து சாப்பிடலாம். அதிலும் முழுவயதும் வேக வைத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தினமும் வேக வைத்த முட்டை சாப்பிட்டால் நல்லது என மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக நமது அரசு பள்ளிகளிலும் மதிய உணவோடு வேக வைத்த முட்டையே வழங்கப்படுகின்றன.வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

சிலருக்கு வேக வைத்த முட்டை பிடிப்பதில்லை. ...