இந்தியா, பிப்ரவரி 5 -- இனிப்பு பண்டங்கள் என்றால் எல்லாருக்கும் தனிப்பிரியம் உண்டு. ஏனெனில் அதன் தித்திப்பான சுவை அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட இனிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். அந்த அளவிற்கு இனிப்பு பண்டங்கள் நம் அன்றாட உணவில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. இனிப்பு பண்டங்கள் என்றாலே பேக்கரிகளுக்கு சென்று வித விதமான உணவு வகைகளை வாங்குவது தான் வழக்கம். ஆனால் பேக்கரிகளுக்கு செல்லாமல் நாமே நம் வீட்டிலேயே செய்யக்கூடிய இனிப்பு பண்டங்களும் உள்ளன. ஜிலேபி என்றால் பலரது பேவரைட் இனிப்பு பந்தமாக இருக்கிறது. இந்த ஜிலேபியை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இந்த முறையை அறிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

ஒரு கப் உளுத்தம் பருப்பு

கால் கப் பச்சை அரிசி

2 கப் சர்க்கரை

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பவுடர்

ரோஸ் எஸ...