இந்தியா, மார்ச் 18 -- இளஞ்சூடான உப்புத் தண்ணீர் சளி, இருமலுக்கு நல்லது. இதை வாய் கொப்பளிக்க் பயன்படுத்தலாம். இதை பருகுவதாலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. நம் உடலில் எலக்ட்ரோலைட் குணங்கள் மற்றும் தண்ணீர் சத்துக்கள் நன்றாக இயங்க சிறிதளவு சோடியம் அல்லது உப்பு தேவை. எனவே தண்ணீரில் சிறிது உப்பு கலந்து பருகுவது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. எலக்ட்ரோலைட்களை சமமாக வைக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

எந்த தண்ணீரை பருகினாலும் அது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. உப்புத் தண்ணீரைப் பருகும்போது, அது உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்துகிறது. இதுகுறித்து பொது மருத்துவர் சுமோல் ரத்னா விளக்குகிறார். அவர் கூறுகையில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உ...