இந்தியா, மார்ச் 12 -- Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் தன் இசைக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மட்டுமல்ல, குரலுக்கும் அத்தனை ரசிகர்கள் உள்ளனர். இவர், தற்போது சினிமா தயாரிப்பில் விருப்பம் கொண்டு சில படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தாயாரித்த படம் தான் ஸ்வீட் ஹார்ட்.

ஸ்வீட்ஹார்ட் படம் யுவன் சங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனத்தின் 4 வது தயாரிப்பு ஆகும். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வைனீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க, கோபிகா ரமேஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தை தயாரித்ததுடன் படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.

மேலும் படிக்க: கார்த்தி எல்லாம் என்னவிட புத்திசாலி.. யுவன் சங்கர் ராஜா ஷே...