இந்தியா, ஜனவரி 31 -- தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவும் தனித்துவமான வரவேற்பை பெற்று வருகின்றன.

அந்த வகையில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'மகாநடிகை' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 5 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் இறுதிகட்டமான கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது.

அந்த வகையில் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஹேமதி காதலை மறுக்க, அந்த நபர் ஆசிட் வீசி அவளது முகத்தை சிதைப்பது...