இந்தியா, மார்ச் 18 -- Viduthalai movie OTT Release: வெற்றிமாறன் இயக்கிய தமிழ் திரைப்படமான விடுதலை இரண்டாம் பாகம் மார்ச் 28 முதல் இந்தியில் ஜீ5 சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும். ஒரு பரபரப்பான அரசியல் குற்றத் திரில்லராகக் கூறப்படும் இந்தப் படத்தில், சூரி, மஞ்சு வாரியர், கிஷோர் மற்றும் ராஜீவ் மேனனுடன் விஜய் சேதுபதி புரட்சியாளர் பெருமாளாக நடிக்கிறார்.

விடுதலை 2 படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வசூல் கிடைத்தாலும், பின்னர் வசூல் குறைந்துவிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை. விடுதலை 2 திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமங்களை ஜீ5 ஓடிடி தளம் பெற்றுள்ளது. முன்னதாக தமிழ் பதிப்புடன் தெலுங்கு பதிப்பும் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது ஹிந்தியில் டப் செய்யப்ப்டடு வெளியிட ஜீ5 திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: விடுதலையில் சரிந்த வெற்றி மாறந்.. கை கொடுக்க...