இந்தியா, பிப்ரவரி 18 -- Vidaamuyarchi OTT: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. பிரபல அமெரிக்க திரைப்படமான ரிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

விடாமுயற்சி படம் வெளியாகி 12 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் இந்திய அளவில் 92.97 கோடி ரூபாய் வசூலும், உலக அளவில் 132.97 கோடி ரூபாய் வசூலும் பெற்றுள்ளதாக திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தியேட்டரில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், படக்குழு எதிர்பார்த்த அளவ...