இந்தியா, பிப்ரவரி 5 -- Vidaamuyarchi: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களில் ஒருவரான பத்ம பூஷண் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக உள்ளது. அஜித் குமாரின் ஒவ்வொரு படமும் தனித்துவமானதாக இருக்கும், விடாமுயற்சியும் அப்படித்தான். இந்தப் படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் இங்கே செய்தித் தொகுப்பாக தரப்பட்டுள்ளது

ஜனவரி 2023 இல் வெளியான துணிவு படம் தான் அஜித்தின் கடைசி தியேட்டர் ரிலீஸ் படம். அதன் பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புதிய படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக அஜித் குமார் 121 நாட்கள் அர்ப்பணிப்புடன் உழைத்ததாகவும், ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல படத...