இந்தியா, பிப்ரவரி 1 -- Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் குமார்- திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், ஏற்கனே படத்தில் இருந்து 2 சிங்கிள்களை படக்குழு வெளியிட்டு, வைப் ஆக்கியது.

இந்நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடலான சவதீகாவின் புது வெர்ஷனை வெளியிட்டுள்ளது படக்குழு. அனிருத் இசையில், அந்தோணிதாசன் பாடிய சவதீகா பாடல் புதுப்புது வார்த்தைகளாலும் துள்ளலான இசையாலும் பேசப்பட்டது.

இந்த வைப்பை குறையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு சவதீகா பாடலின் அனிரூத் வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது. சவதீகா பாடலை அனிரூத் குரலில் கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்தப் பாடல் அனிX ஆண்டோ வெர்ஷன் என அற...