இந்தியா, பிப்ரவரி 3 -- Vetrimaaran: நடிகர் விஜய் தனது கட்சியான 'தமிழக வெற்றி கழகம்' பெயரை கடந்த வருடம் பிப்ரவரி 2ஆம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். நேற்றைய தினம் அவர் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் அவரது தொண்டர்கள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, மதுரை அழகர் கோவில், மாத்தூர் விளக்கில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இது பற்றி பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், அவர் கலந்து கொண்டதின் பின்னணி சார்ந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் 'வாடிவாசல்' படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இருக்கிறார். இந்த படமானது ஜல்ல...