இந்தியா, ஜனவரி 30 -- Urvasi Rautela: டோலிவுட்டில் சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆன படம் 'டாக்கு மகராஜ்'. இந்தப் படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால், சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் ஒரு வெற்றிக் கொண்டாட்ட விழாவை நடத்தினர்.

அந்த விழாவில் படத்தின் முன்னணி நடிகர்கள் மேடையில் இருந்தனர். ஆனால், நடிகை ஊர்வசி ரௌத்தேலாவை நடிகர் பாலைய்யாவும், மற்ற படக்குழுவினரும் புறக்கணித்ததாகவும், அதனால் நடிகை ஊர்வசி ரௌத்தேலாவின் முகம் வாடியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழம்பெரும் டோலிவுட் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த டாக்கு மகாராஜ் படம் ஜனவரி 12ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

பாபி கோலி இயக்கிய இந்தப் படத...