இந்தியா, பிப்ரவரி 17 -- Urvashi Rautela: நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நாயகனாக நடித்த 'டாகு மகாராஜ்' படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ப்ரோமோஷன்களிலும், வெற்றி விழாக்களிலும் அவர் ஆர்வமாக பங்கேற்றார். ஆனால், இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட போஸ்டரில் ஊர்வசி ரவுத்தேலா இல்லாததால் நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி 'டாகு மகாராஜ்' படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை போஸ்டர் ஒன்று வெளியிட்டு தெரிவித்தது. அந்த போஸ்டரில் நந்தமுரி பாலகிருஷ்ணா, பாபி தியோல், பிரக்யா ஜெயிஸ்வால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால், முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஊர்வசி ரவுத்தாலா புகைப்படம் இடம்பெற...