இந்தியா, பிப்ரவரி 5 -- Udit Narayan: பாடகர் உதித் நாராயண் சமீபத்தில், ரசிகையை உதடுகளில் முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனங்களை சந்தித்தார். இப்போது, அவர் பல ரசிகைகளை முத்தமிடுவது போன்ற மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை, எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பயனர் ஒருவர், உதித் நாராயணின் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுக்க கூடி இருக்கும் காட்சியை பகிர்ந்தார். அந்த வீடியோவில் நீல நிற உடையில் இருந்த பாடகர், தன்னிடம் செல்ஃபி கேட்ட ரசிகர்கள் அருகில் வந்து, அங்குள்ள பல பெண் ரசிகைகளுக்கு முத்தம் கொடுத்தார். அதில் அவர் ஒரு பெண்ணின் உதடுகளில் முத்தமிட்ட நிலையிலும் ரசிகை சிரித்துக் கொண்டே நின்றார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் இந்த வீடியோவுக...