இந்தியா, பிப்ரவரி 2 -- Udit Narayanan: பிரபல பாடகர் உதித் நாராயண் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்ட வீடியோ வெளியான நிலையில், இணையத்தின் ஒரு பிரிவினரிடமிருந்து உதித் நாராயன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், உதித் நாராயன் ரசிகைகளை மட்டுமல்ல, பாடகிகளுக்கும் பொது மேடையில் முத்தமிட்ட வீடியோக்களை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

பாடகர் உதித் நாராயன் பெண் ரசிகைக்கு முத்தம் கொடுத்த வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்த பின்னர், பல்வேறு நிகழ்வுகளில் பாடகிகள் அல்கா யாக்னிக் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோருக்கு உதித் நாராயன் முத்தமிடும் பழைய வீடியோக்களை இணையத்தில் தோண்டி எடுத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு கிளிப்பில், உதித் இந்தியன் ஐடல் மேடையில் அல்கா யாக்னிக்கை முத்தமிட்டார். அந்த வீடியோவில் அவர் மேடையில் ...