இந்தியா, நவம்பர் 27 -- உதயநிதி ஸ்டாலின் திரைதுறையிலும், அரசியலிலும் கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், சட்டப்பேரவை உறுப்பினர், திமுகவின் இளைஞரணிச் செயலாளர், நடிகர், முக்கிய தமிழ் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனத்தின் தலைவர், முரசொலி இதழின் ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின், முதன்முதலில் தயாரிப்பாளராகத் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் தயாரித்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியான விஜய், திரிஷா நடித்த குருவி. இதைத் தொடர்ந்து சூர்யா, கமல், சிம்பு என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார். பின்னர் படிப்படியாக தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் படங்களை வெளியிடவும் தொட...