இந்தியா, பிப்ரவரி 17 -- Top 10 Cinema: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மக்கள் விரும்பும் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி படத்தின் ஆல்பம் வெளியீடு வரை இன்றைய முக்கிய செய்திகளை இங்கு காண்போம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது 23வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் முழு பாடல் ஆல்பமும் வெளியாகி உள்ளது. முன்னதாக, இந்தப் படத்திற்கு அனி...