இந்தியா, பிப்ரவரி 8 -- Top 10 Cinema: நடிகர் நாக சைதன்யா ரசிகர்களின் செயலால் தான் குற்றவாளி போல் உணர்வதாக ஆதங்கப்பட்டது முதல் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து கொண்டாடிய சூர்யா வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்காலம்.

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் நடிகர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விவாகரத்து முடிவை சமந்தாவுடன் பேசி பரஸ்பர புரிதலுடன் எடுத்திருந்தாலும், ஊடகங்களும், ரசிகர்களும் என்னை மட்டும் குற்றவாளி போல் பார்க்கின்றனர் என நடிகர் நாக சைதன்யா ஆதங்கமாக பேசியுள்ளார். மேலும், இருவரும் பிரிந்து விட்டோம். வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுவிட்டோம். அதனால் எங்கள் தனிமனித உரிமையை மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்...