இந்தியா, பிப்ரவரி 16 -- Top 10 Cinema: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட காமெடி நடிகர் சிரிக்கோ உதயா தன் காலை இழந்து தவிப்பது முதல் தன் சினிமா கெரியரில் முதல் 100 கோடி ஹிட் அடித்த படத்தை கொண்டாடும் நாக சைதன்யா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

குணச்சித்திர நடிகரான சிரிக்கோ உதயா, கடந்த சில நாட்களாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு பாதிப்பு அதிகமாகி தன் காலை இழந்துள்ளார். மேலும், இவர் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிரிக்கோ உதயா, சந்தானம் படத்திற்கு காமெடி வசனங்கள் எழுதியுள்ளார். மேலும், இவர் பல பாடல்களுக்கு வயலின் இசைக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

ஹிந்தியில் தனுஷிற்கு 2 பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் ஆனந்த் எல் ராய். தற்போது இவருடன் 3வது முறையாக இணைந்து தேரே இஷ்க் மெயின் எனும் ...