இந்தியா, பிப்ரவரி 9 -- Top 10 Cinema: அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 10 மடங்கு பூர்த்தி செய்வதாக வந்த தகவல் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கைகோர்க்கும் நயன்தாரா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இங்கு பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், குட் பேட் அக்லி படத்தில் 10 மடங்கு அதிகமான மாஸ் காட்சிகள் இருக்கும் என அப்படத்தின் ஸ்டன்ட் டைரக்டர் சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் இல்லாத நிலையில், சுந்தர் மாஸ்டரின் பேச்சு ரசிகர...