இந்தியா, டிசம்பர் 8 -- விட்னஸ்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விட்னஸ். இதில் ரோகினி, சண்முக ராஜா, சுபத்ரா ராபர்ட், அழகம் பெருமாள், தமிழரசன்ம, ஜி. செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ள இப்படத்தை தீபக் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாகிய இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது.

ரத்த சாட்சி

ஆஹா தமிழ், மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் ரத்த சாட்சி திரைப்படம் உருவாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்....