இந்தியா, மார்ச் 3 -- This Week OTT: இந்த வாரம் (மார்ச் 3 முதல் மார்ச் 9 வரை) ஓடிடி தளங்களில் பல்வேறு வகையான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சில சுவாரஸ்யமான படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் ஆக்‌ஷன் திரைப்படமான விடாமுயற்சி, ஃபேமிலி டிராமாவான குடும்பஸ்தன், தெலுங்கு படமான தண்டேல், மற்றும் மலையாள படம் ஒன்றும் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (மார்ச் 3) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளது. தமிழுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில், தெலுங்கில் 'பட்டுதலா' (Pattudala) என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆங்கில திரைப்படம...