இந்தியா, மார்ச் 31 -- This Week OTT: மார்ச் மாதத்தில் தண்டேல், ஆபிசர் ஆன் டியூட்டி, பொன்மான் உள்ளிட்ட பல திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், இப்போது ஏப்ரல் முதல் வாரத்திலும் பல்வேறு ஓடிடிளில் புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளன. மல்டி ஸ்டார் திரைப்படமான டெஸ்ட் உள்ளிட்ட சில திரைப்படங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளன.

மாதவன், சித்தார்த், நயன்தாரா இணைந்து நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது. இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4 அன்று ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்கு வர உள்ளது. டெஸ்ட் திரைப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். விளையாட்...