இந்தியா, மார்ச் 9 -- Thalapathy Vijay: நடிகர் விஜய் தமிழ் மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வைத்துள்ளார். இவர் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருவதால், ஹெச். வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் தனது 69வது படமான ஜன நாயகன் தான் தனது இறுதி படம் என அழுத்தமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (ஐஃபா) பங்கேற்ற பாபி தியோல், அந்நிகழ்ச்சியில் ஜன நாயகன் படம் பற்றியும், நடிகர் விஜய் பற்றியும் பெருமையாக பேசியுள்ளார்.

அவர், விஜய் மிகவும் தன்னடக்கமாவர். அன்பானவர். அவர் மிகவும் எளிமையான நபர். அவருடன் பணியாற்றுவது மிகவும் இனிமையாக உள்ளது எனக் கூறினார்.

மேலும் ப...