இந்தியா, பிப்ரவரி 19 -- பிப்ரவரி 19, 2025க்கு முன், இதே பிப்ரவரி 19ஆம் தேதியில் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று தந்த மூன்றாம் பிறை,ஆக்‌ஷனில் விஜய் சேதுபதி மிரட்டிய படம் உள்பட சில சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1982இல் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த படம் மூன்றாம் பிறை. விபத்தில் சிக்கிய நினைவுகளை மறக்கும் அம்னிசியா நோய் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவியை கேர் டேக்கிங் செய்கிறார் கமல்ஹாசன். இவர்களுக்கு இடையிலான உறவை மையப்படுத்தி உணர்வுபூர்வமான காதல் கதையாக இருக்கும் மூன்றாம் பிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஒய்.ஜி. ...