இந்தியா, மார்ச் 2 -- Suzhal 2 OTT: இயக்குநரும் எழுத்தாளர்களுமான புஷ்கர் மற்றும் காயத்ரி 2022 ஆம் ஆண்டில் சுழல் - தி வோர்டெக்ஸ் என்ற வலைத் தொடரை உருவாக்கினர். இந்த கிரைம் திரில்லர் வகையான தமிழ் வெப் சீரிஸ் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைப்பது போல ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு திருப்பத்துடன் முடிந்தது.

இது பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த நிலையில், இப்போது இவர்ககள் இருவரும் சுழல் தி வோர்டெக்ஸ் வலை தொடரின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதியுள்ளனர். இதனை பிரம்மா இயக்கி உள்ளார். மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த இந்தத் தொடர் இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், சுழல் 2 தொடர் எப்படி இருக்கிறது என்பதை பார்வையாளர்கள் கூறியதை இங்கு காணலாம்.

"சுழல் சீசன் 2 அமேசான் பிரைம் ஓடிடியில் நம்பர...