இந்தியா, பிப்ரவரி 13 -- Suresh Kallery: தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் சுரேஷ் கல்லேரி. இவர், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த குடும்பஸ்தன் படத்தில் கடைசியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சுரேஷ் கல்லேரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இவர் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர். இவருக்கு வயது 57. இந்த செய்தியை அறிந்த பல திரைப் பிரபலங்கள் இவரது மறைவிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

சுரேஷ் கல்லேரி, ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு படம், சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப் புலி படம், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் படம், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி படம், மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் கல...