இந்தியா, மார்ச் 9 -- Sundar.C- Khushbu: நட்சத்திர தம்பதியான சுந்தர்.சியும் குஷ்பூவும் தங்களது 25 ஆவது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முறைமாமன் படப்பிடிப்பு சமயத்தில் ஆரம்பித்த இவர்களது காதல் கதை திருமணத்திற்கு பின் 25 ஆண்டுகளை தற்போது பூர்த்தி செய்துள்ளது.

இதை முன்னிட்டு, நடிகை குஷ்பு அவரது எக்ஸ் தள பதிவில், "25வது திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பே. என்றென்றும் நீயும் நானும் ஒன்றாக இருக்க வேண்டும். லவ் யூ சுந்தரா" எனக் குறிப்பிட்டு தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன், குஷ்பூ தனது திருமண புகைப்படத்தையும், 25ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டமாக பழனி கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்திய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த 2 புகைப்படங்கள் மூலம் அவர் தனது 25 ஆண்டு கால வாழ்க்கையை பிரதிபலித்துள்ளார்.

பழன...