இந்தியா, மார்ச் 7 -- Singer Kalpana Raghavendar: பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இப்போது அவரது உடல்நலம் சீராக உள்ளது. இந்நிலையில், அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

அந்த வீடியோவில், "வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை பத்தியும் என் கணவர பத்தியும் நியூஸ்லயும் மீடியாவுலயும் ஒரு தவறான தகவல் பரப்பிட்டு இருக்குறதால, அதப்பத்தின விளக்கம் குடுக்குறதுக்காக தான் இந்த வீடியோவ பண்றேன்.

முதல்ல இந்த வயசுல நான் பிஹெச்டி, எல்எல்பி, இன்னும் நிறைய விஷயங்கள் படிச்சிட்டு இருக்கேன். அதோட என்னோட மியூசிக் கெரியர் மேலயும் ரொம்ப அதிகமா கவனம்...