இந்தியா, பிப்ரவரி 11 -- Singapenne Serial: ஆனந்திக்கு தன் காதலை புரிய வைக்க பணக்கார மகேஷாக இல்லாமல் சாதாரண மனிதனாக மாறப் போகிறேன். என் காதலை நிச்சயம் புரிய வைப்பேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தங்கி உள்ளார். இதை எல்லாம் அறிந்து அன்புவும் ஆனந்தியும் தவித்து வந்தனர்.

இந்நிலையில், மகேஷின் இந்த முடிவை மாற்ற மகேஷின் அப்பா பல முயற்சி எடுத்தும் அது வீணாகிப் போனது. இந்த நிலையில் மகேஷை எப்படியாவது வீட்டிற்கு திரும்ப வர வைக்க வேண்டும் என நினைத்து அவரது அப்பா, ஹாஸ்டல் வார்டனிடம் உதவி கேட்டுள்ளார். மகேஷ் உங்களது பேச்சைத் தவிர வேறு யார் பேச்சையும் கேட்காமல் இருக்கிறார். அதனால், அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு வர வைக்குமாறு வார்டனுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.

அதே சமயம், ஆனந்தியும் மகேஷின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட...