இந்தியா, ஜனவரி 30 -- Singapenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில், அன்பு அம்மா செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கி படுகாயம் அடைந்தார். இதை பார்த்த ஆனந்தி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் அருகில் இருந்து அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டார். அத்தோடு நில்லாமல், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக படிபூஜை எல்லாம் செய்து தன்னையே வருத்திக் கொண்டார்.

ஆனால், ஆனந்தியின் பெயரை எடுத்தாலே அன்புவின் அம்மாவிற்கு பிடிக்காது என்பதால், நாங்கள் தான் உங்களை பார்த்துக் கொண்டோம் என அன்புவும் அவரது தங்கையும் கூறினர். ஆனால், இந்த விஷயம் எப்படியோ நர்ஸ் மூலம் அன்பு அம்மாவிற்கு தெரியவர என்னுடன் ஹாஸ்பிட்டலில் இருந்தது யார் என அன்புவையும் அவரது தங்கையையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை அறிந்து கொண்டார். பின், ஆனந்தியை ஹாஸ்டலில் போய் திட்டவும் செய்த...