இந்தியா, பிப்ரவரி 12 -- Singapenne Serial: ஆனந்தி மேல் தான் வைத்திருக்கும் காதலை நிரூபிப்பதற்காக மகேஷ் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருக்கிறார். இதை அறிந்து அன்புவும் ஆனந்தியும் வேதனைப்பட்டு வந்தனர். இந்நிலையில், லாட்ஜில் உள்ள மகேஷின் நிலையைக் கண்டு கண் கலங்கிய அன்பு, நம் காதலால் தான் இத்தனை கஷ்டம். நீ என்னை எதுக்கு தேடி வந்த என ஆனந்தியிடம் அழுதுகொண்டே கேட்கிறார்.

அன்புவின் இந்தக் கேள்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஆனந்தி, கதறி அழுகிறாள். ஆனந்தி அழுவதை தூரத்தில் இருந்து பார்த்த மித்ரா, ஆனந்தி அருகில் வந்து அவள் என்ன பேசுகிராள் என கண்காணித்தார். அப்போது, ஆனந்தி, அவளுடைய அழகனை கண்டுபிடித்து விட்டதும், மகேஷின் காதலால் அவர்களுக்குள் பிரச்சனை வந்திருப்பதும் மித்ராவிற்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மித்ரா ஆனந்தி, அழகன் பற்றி ந...