இந்தியா, ஏப்ரல் 7 -- Sikandar Movie: Sikandar Movie:இந்த ஆண்டிற்கான ஈத் பண்டிகை விருந்தாக சல்மான் கானின் ரசிகர்களுக்கு வந்தது சிக்கந்தர் படம். இந்தப் படம் 2 ஆண்டுகளுக்கு பின் ஈத் பண்டிகையில் ரிலீஸான சல்மான் கான் படமாகும். சல்மான் நடிப்பில் கடைசியாக வந்த கிசி கா பாய் கிசி கி ஜான் பெரிதாக மக்களை கவராததால், சிக்கந்தர் படம் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் முதல் நாளிலிருந்தே, சல்மான் கானின் சிக்கந்தர் பாசிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. அதையும் மீறி, படத்தின் வசூல் பெரியதாக இருந்தது. எனவே சிக்கந்தர் ஹிட்டா அல்லது பிளாப்பா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சிக்கந்தர் பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இது வெளியான நாளில் ஒரு மிதமான தொ...