இந்தியா, ஏப்ரல் 30 -- தமிழ் சினிமாவின் அடையாளமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் என பல கலைஞர்கள் இருப்பர்கள். அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன்.

தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்த இவர், தனது அற்புத படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக யங்ஸ்டருக்கு மிகவும் பிடித்தமான இயக்குநராக இருந்து வரும் செல்வராகவன் தனது படங்களில் காதலை முற்றிலும் மாறுபட்ட பரிணாமத்தில் காட்டி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது, ஹீரோ ஹீரோயிஸம் செய்வது, நல்லவனாக இருப்பது என்ற அடிப்படை விஷயங்கள் அனைத்து இவரது படங்களிலும் இருந்தாலும் அதை இவர் கையாண்டிருக்கும் விதமானது என்பது முற...