இந்தியா, பிப்ரவரி 22 -- Sarigamapa Little Champs:தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

அர்ச்சனா தொகுப்பாளராக பங்கேற்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான ரவுண்ட் கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த வாரம் இசை ஜாம்பவான்களான எஸ்.பி. பி, யேசுதாஸ் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்களை பாடும் லெஜண்டரி ரவுண்ட் நடைபெற உள்ளது.

மேலும் இந்த ரவுண்டில் கங்கை அமரன், யுகேந்திரன் வாசுதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர...