இந்தியா, மார்ச் 30 -- Sardar 2: நடிகர் கார்த்தி- மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படக்குழுவினர் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது என்ன வீடியோ, படக்குழு ரசிகர்களுக்கு கொடுத்த அப்டேட் என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: சாய் பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். கார்த்தி, ராஷி கண்ணா, லைலா என பலர் நடித்திருந்த இந்தப் படம் ரா ஏஜெண்ட் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறை பற்றியும் கூறியதுடன், குடிநீரின் அத்தியாவசியம் குறித்தும் பேசியிருப்பார் இயக்குநர்.

இந்தப் படம், மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகத்திற்கான ...