இந்தியா, ஜனவரி 26 -- Saif Ali Khan: கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் மீது பந்த்ராவில் உள்ள அவரது 11வது மாடிக் குடியிருப்பில் ஒரு அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார். இது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான், லீலாவதி மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின் வீடு திரும்பினார்.

இதையடுத்து சைஃப் அலிகான், ஜனவரி 26 இன்று அவரது இல்லத்திலிருந்து முதல் முறையாக வெளியேறினார். அவரைப் பின்தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அப்போது சைஃப் அலிகானுடன் அவரது மனைவி கரீனா கபூரும் இருந்தார்.

நெட்டிசன்கள் சைஃப் அலிகான் வீட்டில் இருந்து வெளி...