இந்தியா, பிப்ரவரி 3 -- 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முதலில் சாய் பல்லவியை நடிக்க கேட்டதாக சந்தீப் ரெட்டி வங்கா பேசி இருக்கிறார்.

நாகர்ஜூனா, சாய்பல்லவி நடிப்பில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக இருக்கும் 'தண்டேல்' பட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் ரெட்டி வங்கா, ' 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் முதலில் நான் சாய்பல்லவியை நடிக்க வைக்கலாம் என்று எண்ணி, கேரளாவில் இருந்த ஒருகிணைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு, சாய் பல்லவியை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும். இது ரொமாண்டிக்கான படம் என்றேன்.

உடனே அவர் ரொமண்டிக்கான திரைப்படமா? ரொமண்டிக் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். உடனே நான், தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே காட்டப்பட்ட ரொமண்டிக்கான காட்சிகளை விட, இதில் அதிகமாக ரொமண்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். உடனே அவர்...