இந்தியா, மார்ச் 9 -- Sachein Movie release Update: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்தப் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் மிக முக்கியமான ஒன்று. இந்தப் படத்தில் விஜய்- ஜெனிலியா ஜோடி பலராலும் கவரப்பட்டது.

தமிழ் ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் படமாக அமைந்துள்ள இந்தப் படம் தற்போது ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வரும் கோடையில் இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: ஸ்வீட் ஹார்ட் விஜய்.. புகழும் வில்லன் நடிகர் பாபி தியோல்..

இந்நிலையில், சச்சின் படத்தின் விஜய் பாடிய, வாடி வாடி கைப்படாத சீடி எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கலைப்புலி தாணு அவருடைய யூட...