இந்தியா, ஜனவரி 29 -- Ravi Mohan 34: நடிகர் ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் சில நாட்களுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம், மாறிவரும் சமூக சூழலில் காதல் எத்தகைய பரிமாற்றத்தை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால் எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில், அவரது 34வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் மெகாஹிட் அடித்த டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு, தனது அடுத்த படைப்பை ரவி மோகனுடன் இணைந்து உருவாக்கி வருகிறார். இந்தப் படம் அரசியல் கதைக் களத்தை கொண்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாகவே டைட்டில் டீசரும் வெளியாகி உள்ளது.

இந்த டீசர், சட்டப்பேரவையில் நடைபெறும் காரசார விவாதம் தான் படத...