இந்தியா, ஜனவரி 26 -- Pushpa 2 Record: புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்த இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, பெரும் வசூலைக் குவித்துள்ளது. மீண்டும் வேகமெடுத்த வசூல்

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா படம், உலகம் முழுவதும் ரூ.1,830 கோடி வசூலைக் கடந்துள்ளது. சமீபத்தில் ஜனவரி 17 ஆம் தேதி கூடுதல் காட்சிகளுடன் புஷ்பா 2 ரீலோடட் வெளியானதால், மீண்டும் வசூல் வேகம் பிடித்துள்ளது. இந்த வரிசையில், இப்படம் தற்போது மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் ஒற்றைத் திரையரங்கில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது. இதை படக்குழு இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70மிமீ திரையரங்கில் 51 நாட்களில் புஷ்பா 2 படத்திற்கு 206 காட்சிக...