இந்தியா, மார்ச் 18 -- Ponman Movie Review: சூக்ஷ்மதர்ஷினி, குருவாயூர் அம்பல நடையில், ஜெய ஜெயஜெயஹே உள்ளிட்ட படங்களில் மூலம் புகழ் பெற்ற நடிகர் பாசில் ஜோசப். இவர் நாயகனாக நடித்த மலையாள திரைப்படம் பொன்மான் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. டிராமா த்ரில்லராக உருவான இந்த படத்தில் சாஜின் கோப்பு, லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோதிஷ் சங்கர் இயக்கியுள்ளார். ஓடிடியில் தமிழில் வெளியான இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

அஜேஷ் (பாசில் ஜோசப்) ஒரு நகை விற்பனையாளராக வேலை செய்கிறார். திருமணங்களுக்கு தேவையான நகையை முன்கூட்டியே ஏற்பாடு செய்கிறார். திருமணம் போன்ற நிகழ்வுகளில் வட்டியில் நகையை கொடுத்து அதற்கு சமமான பணம் பெறும் வேலையையும் செய்து வருகிறார். இந்த தொழிலில் அபாயம் அதிகமாக இருந்தாலும் குடும்ப ச...