இந்தியா, பிப்ரவரி 17 -- தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ளார் பா. ரஞ்சித். இவர், சமூக அக்கறை கொண்ட, வாழ்வியலை விளக்கும் வகையிலான பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், பா. ரஞ்சித் தயாரித்த பாட்டில் ராதா படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

நகைச்சுவை நாடகத் திரைப்படமாக உருவாக்கப்பட்ட பாட்டில் ராதா, ஓடிடியில் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்தப் படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் பிப்ரவரி 21 அல்லது 28 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பட்டில் ராதா படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த நகைச்சுவை நாடகத் திரைப்படத்தை பா.ரஞ்ச...