இந்தியா, மார்ச் 5 -- Neek OTT: ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வந்த திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், இப்படம் விரைவில் ஓடிடி பக்கம் வரும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இந்தப் படத்தில் இளம் தலைமுறை நடிகர்களை வைத்து, அவர்களது காதல், காதல் தோல்வி குறித்து பேசி இருப்பார் தனுஷ். இந்தப் படம் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மேலும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் எப்படி இருக்கிறது.. நெட்டிசன்கள் விமர்சனம்

கதையின் நாயகனாக வரும் பவிஷின் பெற்றோரான சரண்யாவும்- ஆடுகளம் நரேனும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்காக பெண் பார்க்கு...