இந்தியா, பிப்ரவரி 24 -- NEEK Movie Box Office: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு என தனியாக பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் பலராலும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தனுஷ் இளம் தலைமுறை நடிகர்களை வைத்தும், அவர்களது காதல், காதல் தோல்வி குறித்தும் பேசும் வகையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா, பிரியா வாரியர் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. காதலுக்கும் காதல் தோல்விக்கும் இடையே தவிக்கும் இளம் தலைமுறையினரை பற்றிய படம் இது பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இந்தப் படம் முதல் நாள் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட...