இந்தியா, ஏப்ரல் 11 -- Nayanthara Vs Tamannaah: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மில்கி பியூட்டி என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமன்னா. பாலிவுட்டிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர் தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் படிக்க| உண்மைய உணர இத்தனை வருஷம் ஆச்சு.. இனி தான் என் வேலைய காட்டப் போறேன்- தமன்னா

அதன் பின், வியாபாரி, கல்லூரி படிக்காதவன், அயன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். இதன் மூலம் தமன்னாவிற்கு தனது பயணத்தைத் தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே தமிழ் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகினர்.

அயன் படத்தில் நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து ஹிட் கொடுத்த தமன்னா, அதன்பின் சில நாட்களிலேயே அவரது தம்பி கார்த்திக்கு ஜோடியானார். லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம் ...