இந்தியா, மார்ச் 27 -- Music Director Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா, சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்த நிலையில், அவரை பாராட்டி விழா நடத்த உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 82 வயசாச்சு.. இவர் என்ன பண்ணிடுவாருன்னு நினைக்காதீங்க.. நீங்க நினைக்குற அளவுகோலில் நான் இல்லை- இளையராஜா

லண்டனின் அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி வேலியண்ட் எனும் பெயரில் உலகின் சிறந்த இசைக் குழுவினருடன் இணைந்து இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா. இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக பல அரசியல் தலைவர்களும் சினிமா ...