இந்தியா, பிப்ரவரி 15 -- Mrs Movie: மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் இந்தி ரீமேக் தான் மிசஸ் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஆரத்தி கடவ் இயக்க, தங்கல் புகழ் நடிகை சன்யா மல்ஹோத்ரா நடித்திருந்தார். இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்டிரீம் செய்யப்பட்டது. இந்தப் படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவாகவும் நெகட்டிவ்வாகவும் விமர்சனங்கள் வந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில், ஆண்கள் உரிமை அமைப்பான எஸ்.ஐ.எஃப்.எஃப் - சேவ் இந்தியன் ஃபேமிலி ஃபவுண்டேஷன், படத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இந்த கருத்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்), எஸ்ஐஎஃப்எஃப் வெளியிட்டுள்ள பதிவில், "கட்டுமான தளங்கள், ரயில...