இந்தியா, பிப்ரவரி 8 -- Movie Shoot: 2024 ஆம் ஆண்டு மலையாள சினிமாத்துறைக்கு நல்ல நல்ல படங்கள் வெளியானதால், அவை வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை தந்ததாக ரசிகர்களுக்கு தோன்றியது.

ஆனால், கடந்த ஆண்டு மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், தி கோட் லைஃப் மற்றும் மார்க்கோ போன்ற சில வெற்றிப் படங்கள் வெளியாகின. இருப்பினும், பல்வேறு காரணங்களால் சினிமாத்துறை பெரும் நிதி இழப்பை சந்தித்ததாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் படாவிட்டால், ஜூன் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் திரையிடலை நிறுத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், மல்லுவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.

நியூஸ் மினிட் செய்தியில் பேசிய, தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார், "தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்க உ...