இந்தியா, பிப்ரவரி 19 -- Movie Release: தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் பண்டிகை காலத்தை முன்னிட்டும், வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் தான் வெளியிடப்படுகின்றன. அப்போது தான் அவை குறைந்தது 3 நாட்களுக்கு மக்களின் ஆதரவில் ஹிட் அடிக்கும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது, தனுஷ் இயக்கத்தில் இளம் நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய டிராகன் படமும் இந்த வாரம் வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 21ம் தேதி) வெளியாக உள்ளன.

காத்து வாங்கும் தியேட்டர்கள்

ஆனால், இந்தப் படம் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருக்கிறது. இந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங்கள் தொடங்கப்பட்ட நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் இருக்கைகள் புக் செ...