இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25ஆம் தேதி) காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குநராக பார்க்கப்படும் பாரதிராஜாவின் மகனான இவர் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

மனோஜின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் நேரில் வந்தும் சமூக ஊடகங்கள் மூலமும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,

"மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப் பருவத்தில் பறந்து விட்டாயா? 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்வ...